திருவண்ணாமலை நகரின் ஈசானிய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்ட காவல் துறை சார்பில் தமிழ்நாட்டிலேயே கை கழுவும் வாகனங்களை முதல்முறையாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்.
நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் கை கழுவும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்கள் அதிகம் கூடும் தற்காலிக காய்கறி சந்தையில் மேலும் கை கழுவுபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக கைகழுவும் வாகனம் தொடக்கம்! பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பேசுகையில், “பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட்டில் கைகழுவ வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவிய பின்னர் காய்கறிகளை வாங்கச் செல்லலாம். இதுபோல் மேலும் நான்கு வாகனங்கள் நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பப்படும்”என்றார்.
இதையும் படிங்க...கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!