தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் ஏரியில் அடக்கம் - கரோனா தொற்று

திருவண்ணாமலை: கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சுடுகாட்டில் புதைக்காமல் ஏரியில் புதைக்கப்பட்டது.

உடலை அடக்கம் செய்யும் ஊழியர்கள்
உடலை அடக்கம் செய்யும் ஊழியர்கள்

By

Published : Jun 13, 2020, 8:01 PM IST

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (50). இவர் வேங்கிக்கால் பகுதியில் மரப் பட்டறை வைத்து தச்சு பணி செய்து வந்தார். இவரது தம்பியும் அவருடன் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி கரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு விநாயகமூர்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 13) உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். ஊர் பொதுமக்கள் ஒருமனதாக கிராம சுடுகாட்டில் விநாயகமூர்த்தியின் சடலத்தை புதைக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

பின், விநாயகமூர்த்தியின் உடல் நல்லவன்பாளையம் கிராமம் அருகே உள்ள சமுத்திரம் ஏரியின் மையப்பகுதியில் பத்தடி ஆழம் தோண்டப்பட்டு பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இறந்தவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அடுத்த மாதம் இரண்டாம் தேதி இறந்தவரின் இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளது அவர் குடும்பத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகமூர்த்தியின் தம்பியும் அவருடன் பணிபுரிந்து வந்த நிலையில், அவருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details