தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் இன்று 4 பேருக்கு கரோனா - Corona impact on Thiruvannamalai

திருவண்ணாமலை: புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு 4ஆக உயர்வு
கரோனா பாதிப்பு 4ஆக உயர்வு

By

Published : May 18, 2020, 9:05 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக மும்பையிலிருந்து திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு கிராமத்திற்கு வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பெண் குழந்தை ஆகியோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்யாறு வட்டம் தீலப்பை கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளதால் இன்று மட்டும் மொத்தம் 4 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. நேற்று (மே 17) வரை தொற்று குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உள்ளது. எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 113ஆக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 3,096 பேர், மற்ற மாவட்டங்களிலிருந்து 1,086 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 2,337 பேர் என மொத்தம் 6,519 பேர் கடந்த 30ஆம் தேதி முதல் நேற்று வரை ஊர் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 320 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details