தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் 163 பேருக்கு கரோனா! - கரோனா தடுப்பூசி

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூலை 21) ஒரே நாளில் 163 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Corona guarantees 163 more people in Thiruvannamalai today!
Corona guarantees 163 more people in Thiruvannamalai today!

By

Published : Jul 21, 2020, 8:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 21) ஒரே நாளில் 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 163 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,233 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,087 ஆக உள்ளது. அதேசமயம் இதுவரை சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா தொற்றால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details