தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சம்: பயணிகள் வரத்து இல்லாமல் தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்! - திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்

திருவண்ணாமலை: கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பயணிக்க வெளியில் வராததால் தனியார் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் பேருந்து ஒன்று
பேருந்து நிலையத்தில் இருக்கும் தனியார் பேருந்து ஒன்று

By

Published : Jun 11, 2020, 1:56 AM IST

திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று(ஜூன்10) முதல் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்கு மாறாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டது. மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகளின் வருகை குறைவாய் இருந்த காரணத்தினால், அந்தப் பேருந்தும் ஒரே ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர், கரோனா அச்சம் காரணமாக, பயணிகள் வராததால், பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த தனியார் பேருந்தும் திரும்பி சென்றுவிட்டது.

இதனால் பேருந்துக்கு செலவாகும் டீசல், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான கூலி ஆகியவற்றிற்குக் கூட வருமானம் வராது என்ற நிலையில், தனியார் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அங்கு 50-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் பயணிகளின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதோடு, பேருந்து நிலையத்தில் உணவகங்கள், திறக்கப்படாததால் அரசுப் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்களும் உணவின்றி பசியால் வாடினர்.

இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதி: ரூ.1 கோடி வழங்கிய சொத்தாட்சியர்

ABOUT THE AUTHOR

...view details