திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகன் ராஜேஷ், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கரோனா நிதி வழங்கி வருகின்றனர்.
பலர் அரிசி, மளிகை பொருள்கள், காய்கறிகள், உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அதேபோல், மாணவன் ராஜேஷ் தனது உண்டியலில் சேர்ந்து வைத்துள்ள 1860 ரூபாய் சோமிப்பை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் வழங்கினார். அந்த மாணவனை பாராட்டி கைகுலுக்கிய ஆட்சியர் அந்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார்.