தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது.
திருவண்ணாமலையில் 9 ஆயிரத்தை தாண்டிய கரோனா! - திருவண்ணாமலை கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை: இன்று மட்டும் 95 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது.
![திருவண்ணாமலையில் 9 ஆயிரத்தை தாண்டிய கரோனா! oe](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:09:00:1597844340-tn-tvm-01-corona-pandemic-script-7203277-19082020190723-1908f-1597844243-1029.jpg)
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் 95 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 770ஆக உள்ளது.சிகிச்சை பலனின்றி 129 பேர் உயிரிழந்துள்ளனர். புறநோயாளிகள் பிரிவிலிருந்து 13 பேர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த 5 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற ஒருவர், முன் களப்பணியாளர் ஒருவர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 15 பேர் உள்ளிட்ட 95 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.