தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் 5 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

By

Published : Jul 26, 2020, 5:37 PM IST

திருவண்ணாமலை: இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 85ஆக உயர்ந்துள்ளது.

கரோனா
கரோனா

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது. குறிப்பாக சென்னையில் அதிகரிக்க தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,909ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 176 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது. பூரணமாக குணமடைந்து 3 ஆயிரத்து 212 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 48 பேர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது, அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details