திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 567 ஆக இருந்தது, இன்று புதிதாக 22 பேருக்கு நோய்த் தொற்று உறுதியான நிலையில், மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த மூன்று பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 13 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த ஐந்து பேர் உள்ளிட்ட 22 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.