தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவில் இருந்து மீள இசை கூட்டுப் பிரார்த்தனை! - corona virus

திருவண்ணாமலை: கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி, நாதஸ்வர இசை கலைஞர்கள் ராகங்கள் இசைத்து கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கரோனாவில் இருந்து மீள இசை பிராத்தனை!
கரோனாவில் இருந்து மீள இசை பிராத்தனை!

By

Published : Apr 11, 2020, 9:49 AM IST

Updated : Apr 11, 2020, 11:04 AM IST

உலகையே அச்சமடைய செய்திருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் தற்போது இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும், வைரஸ் பாதிப்பில் இருந்து மிக விரைவாக மக்கள் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பவும், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் முன்பாக நாதஸ்வர இசைகலைஞர்கள் , சங்கராபரணம், அருணாசல சிவ ராகம் உள்ளிட்ட ராகங்களை இசைத்து கூட்டுப் பிரார்த்தனை ஈடுபட்டனர்.

இசை கூட்டுப் பிரார்த்தனை

மழை வேண்டியும், நாடு செழிக்கவும், நோய் நொடிகளில் இருந்து மக்களை காப்பாற்றவும் இசை வடிவில் இறைவனிடம் பிரார்த்தனை மேற்கொண்டால் உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் தாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டதாக நாதஸ்வர இசை கலைஞர்கள் தெரிவித்தனர்.

Last Updated : Apr 11, 2020, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details