தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு - thiruvannamalai district news

திருவண்ணாமலை: செங்கம் அருகே காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு
காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

By

Published : Oct 15, 2020, 5:18 PM IST

கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணகுமரன் உத்தரவின் பேரில் செங்கம் அருகே பொதுமக்களுக்காக கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

இதில் செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன்ராஜா, மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு

அப்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து நாட்டுப்புற கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details