தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய இயக்குனர் தேர்தல்: முன்னாள் அமைச்சர் வேட்புமனு தாக்கல் - கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய இயக்குனர் தேர்தல்

திருவண்ணாமலை: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய இயக்குனர் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

cooperative-milk-producers
cooperative-milk-producers

By

Published : Feb 28, 2020, 7:25 PM IST

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய இயக்குனர்கள் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்காக பல்வேறு தரப்பினர் வேங்கிக்கால் ஆவின் குளிரூட்டும் நிலையம், ஆவின் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். அதைத்தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

பின்னர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தபோது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 17 இயக்குனர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்புமனு தாக்கல்

இதையும் படிங்க:’தரமற்ற பால் உற்பத்தியாவதற்கு தரமற்ற கால்நடைத் தீவனங்களே ஆதாரம்’

ABOUT THE AUTHOR

...view details