தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தண்ணீர் பஞ்சம் தீரும்வரை குளிர்பான கம்பெனிகள் மூட வேண்டும்' - விக்ரம ராஜா - குளிர்பானக் கம்பெனி

திருவண்ணாமலை: "தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், குளிர்பான கம்பெனிகள் நிலத்தடி நீர் எடுப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா

By

Published : Jul 6, 2019, 11:51 PM IST

இது குறித்து செய்தியாளர்கள சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா, "நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூறு உரை மேற்கோள் காட்டி பேசியதை வரவேற்கின்றோம். ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்தும் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்ததை, அனைத்து தரப்பு வரி செலுத்துபவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா பேட்டி

அன்றாடம் பயன்படுத்தக் கூடிய உணவு பொருட்களுக்கு வரி விலக்கு, டோல்கேட் கட்டணம் குறைப்பு உள்ளிட்டவைகளை எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஒட்டுமொத்த விலைவாசியும் உயர்ந்து அது மக்களை இன்னலுக்கு ஆக்கும். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் உயிரை குடிக்கும் நச்சு குளிர்பான கம்பெனிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி காசாக்குவதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details