காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மறைந்த ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த நாள் இன்று (ஆக.20) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள காந்தி சிலை அருகே, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில், ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா - மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினர்! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியினர்
இவ்விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு செங்கம் ஜி.குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.