தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சடலத்தை புதைப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் - குழியை மூடிய காவல் துறை! - குழியை மூடிய காவல்துறை

திருவண்ணாமலை: ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

conflict-between-the-two-sides-in-burying-the-corpse
conflict-between-the-two-sides-in-burying-the-corpse

By

Published : May 17, 2020, 11:24 PM IST

திருவண்ணாமலை அடுத்த துர்கை நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன்(45) என்பவர் இன்று காலமானார். இதனால் அவரது உறவினர்கள் சடலத்தை வடஆண்டாப்பட்டு கிராம ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதியில் புதைக்க குழி தோண்டியுள்ளனர்.

ஆனால் அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பச்சையம்மாள், அவரது கணவர் பழனிவேல் ஆகியோர் சடலத்தை, அங்கு புதைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, அதில் பழனிவேல் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பழனிவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் புகார் மனுவை வழங்கியுள்ளார்.

புகாரையடுத்து விரைந்து வந்த வருவாய்த்துறை, காவல் துறையினர் இருதரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர். பின்னர் சடலத்தை புதைக்கத் தோண்டிய குழியையும் மூடினர். இதனையடுத்து துர்கைநம்மியந்தல் கிராம மக்கள் அவர்கள் புதைக்கும் சுடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்தனர்.

சடலத்தைப் புதைப்பதற்கு ஏற்பட்ட மோதலால், சடலக்குழியை காவல் துறையினர், வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து மூடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்த பெண்கள் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details