திருவண்ணாமலை: கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்வது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.
நேற்று (ஜனவரி 16) இரவு அருந்ததி காலனியை சேர்ந்த அமுதா என்பவர் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலத்தை வழக்கமாக அருந்ததி காலனி சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பாதையில் செல்லாமல் ஊர் பாதை வழியாக செல்வதாக முடிவு செய்யப்பட்டதால் இரு சமூகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு சமூகத்தினரிடையே மோதல் மோதலை கட்டுப்படுத்த வடக்கு மண்டல காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா தலைமையில் 800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Alanganallur Jallikattu: 21 காளைகளை வென்ற கார்த்திக் சிறந்த வீரராக தேர்வு!