திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பாராட்டு விழாவிற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
மேலும் எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியும் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளர் துரை சோ. தர்மனுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களிடையே உரையாற்றிய சோ. தர்மன், ”மாணவர்களின் முகம் எப்போதும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல் மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டும்.
நான் பத்தாம் வகுப்பு கூட படித்துமுடிக்க முடியாமல் பாதியிலேயே ஓடிப்போனவன். நான் 14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நாவல்தான். இரண்டு கொலைகள் செய்த ஒருவர் திருந்துவதற்கு காரணமாக இருந்தது ஒரு பெருச்சாளிதான்.