தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயம் கற்க ஆர்வம் காட்டும் கல்லூரி மாணவிகள் - விவசாயிகளுக்கும் கல்லூரி மாணவிகள்

திருவண்ணாமலை: கரோனா ஊரடங்கால் கிராமப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு விவசாயத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கல்லூரி மாணவிகள்
கல்லூரி மாணவிகள்

By

Published : Jul 24, 2020, 8:26 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி பெண்கள் இந்த கோவிட் - 19 ஊரடங்கு காலத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தனர். வீட்டில் இருந்த கல்லூரி மாணவிகள் தாங்களாக விவசாயம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து வீட்டில் உள்ள பெற்றோர்கள் உதவியால் தற்போது அவர்கள் தங்களது வயல்களில் களை எடுத்தல், நடவு நடுதல், பூச்செடிகளை பராமரித்தல், பூ பறித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து கல்லூரி மாணவிகள் தெரிவிக்கையில், விவசாயம் என்பது மக்களுக்கு உணவளிக்கும் தொழிலாக விளங்குகிறது. இதில் குறைந்த அளவு வருமானம் ஈட்டினாலும், பிறருக்கு உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாய பணிகளை மேற்கொள்வது மனதிற்கு நிறைவு அளிக்கிறது. கோவிட் -19 ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தத் தலைமுறையினர் குறைந்தளவு வருமானம் கிடைப்பதால் பிற தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உணவு பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை வருங்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கல்லூரி பெண்களான நாங்கள் விவசாயத்தை கற்பதன் மூலம் எதிர்கால விவசாயத்திற்கு முக்கியத்துவத்தையும் விவசாயத்தையும் சொல்லித்தர ஏதுவாக இருக்கும் என்பதாலேயே விவசாய பணிகளை கற்று விவசாயத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details