திருவண்ணாமலை: வந்தவாசியை அடுத்த தெள்ளார் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் நேற்று (ஜூன் 30) ஆண்டு விழா நடைபெற்றது. அப்போது வணிகவியல் துறை மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.
கல்லூரி ஆண்டு விழாவிற்கு முன்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிப்பேராசிரியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.