தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடையாக நடந்த சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்: பொதுமக்கள் வரவேற்பு! - Tiruvannamalai news

திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, கால்நடையாக நடந்தபடியே பொதுமக்களிடமிருந்து குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி பெற்றார்.

Petition
Petition

By

Published : Aug 11, 2020, 1:30 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை கைகளில் வைத்துக்கொண்டு, அலுவலக நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தனது காரை நுழைவு வாயிலிலேயே அனுப்பிவிட்டு, அங்கிருந்து பொதுமக்களிடம் நடந்தபடியே சென்று மனுக்களை வாங்கிச் சென்றார். வழிநெடுக நின்று கொண்டிருந்த மக்களிடம், மனுக்களை வாங்கிய பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் படிக்கட்டில் அமர்ந்தபடி பொதுமக்களிடமிருந்து மற்ற மனுக்களைப் பெற்றார்.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலமாக பொதுமக்கள் தங்களுடைய குறைகளை அளிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து நடந்தபடியே மனுக்களைப் பெற்றுச் சென்றது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ABOUT THE AUTHOR

...view details