தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை: பெயர் சூட்டிய ஆட்சியர்! - தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை

திருவண்ணாமலை: பெற்றோர்களால் பச்சிளம் குழந்தையை வளர்க்க முடியாமல் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் ஆதவன் எனப் பெயர் சூட்டினார்.

குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்
குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்

By

Published : Jan 29, 2021, 3:02 PM IST

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத் துறை மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 21ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை, குடும்பத்தினர் வளர்க்க இயலாத காரணத்தால் அவர்களின் விருப்பப்படி அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இக்குழந்தை மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உடனடியாகச் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று (ஜன. 29) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத் துறையின் அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி 'ஆதவன்' எனப் பெயர் சூட்டி திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: 270 கி.மீ தூரம்...மூன்று மணி நேரம்...அசர வைத்த ஆம்புலனஸ் டிரைவர்...திக்திக் நிமிடங்கள்!

ABOUT THE AUTHOR

...view details