திருவண்ணாமலை நகரின் தேரடி வீதியில் உள்ள, நகராட்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்டம் முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த, 238 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 733 மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொழில் வழிகாட்டி கையேடு-2020 என்ற புத்தகம் வழங்கும் விழாவை ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு கையேட்டினை பெற்றுக்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற மாணவர்களுக்கு இந்தக் கையேடு, மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வழங்கப்படும். இந்தக் கையேட்டில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் என்னென்ன படிப்புகள் படித்தால், எந்தெந்த துறைகளில் வேலை கிடைக்கும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.