தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர் அலட்சியம்

திருவண்ணாமலை செங்கத்தில் உள்ள உணவகத்தில் தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி இருந்தது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர் அலட்சியம்
தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர் அலட்சியம்

By

Published : Sep 14, 2022, 10:05 AM IST

திருவண்ணாமலைமாவட்டம் செங்கம் பெங்களூர் மெயின் ரோட்டில் K2B பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளருக்கு வழங்கிய புதினா சாதம் மற்றும் தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி ஊர்ந்த உணவை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்துள்ளது.

இதுகுறித்து உரிமையாளரிடம் பேசியபோது, “அப்படித்தான் இருக்கும். உயிருடன் தானே இருக்கின்றது.. எடுத்து வீசிவிட்டு சாப்பிடவும்” என்று ஒருமையில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரணியில் பார்சல் உணவில் எலியின் தலை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், செங்கம் K2B பவன் உணவகத்தில் கரப்பான் பூச்சியுடன் உணவு பரிமாறிய செயல் வாடிக்கையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சி - உணவு பாதுகாப்பு அலுவலர்களின் தொடர் அலட்சியம்

முன்னதாக செங்கத்தில் உள்ள தின்பண்டக் கடையில் பழைய எண்ணெய் வைத்து பலமுறை தின்பண்டம் தயாரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியும், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்று தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க:சைவ ஹோட்டல் உணவில் எலியின் தலை...! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

ABOUT THE AUTHOR

...view details