தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூடியூபர் போல மிரட்டுகிறார் முதல்வர் - நாராயணன் திருப்பதி புகார் - அதிமுக பாஜக கூட்டணி

செந்தில் பாலாஜிக்காக பரிந்து பேசும் முதலமைச்சர் யூடியூபர் போல மிரட்டுவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும்!:பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி
2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும்!:பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி

By

Published : Jun 17, 2023, 1:25 PM IST

யூடியூபர் போல மிரட்டுகிறார் முதல்வர் - நாராயணன் திருப்பதி புகார்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மத்திய அரசு திட்டங்களுடைய பயனாளிகளை சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார் பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி.பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கி மோசடி செய்து கைது செய்யப்பட்டதற்க்கு ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவைக்கும் தற்பொழுது மிகப் பெரிய பிரளயம் வந்துவிட்டது போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது, என பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில்,”கடந்த காலங்களில் செந்தில் பாலாஜி ஒரு மோசடி பேர்வழி, ஊழல்வாதி, கள்ளக் கடத்தல்காரர் உள்ளிட்ட பல வார்த்தைகளில் தாக்குதலில் ஈடுபட்ட தற்போதைய முதல்வர் ஸ்டாலின், இன்று செந்தில் பாலாஜிக்காக உருகி கொண்டிருப்பது ஏன் எனவும், 18 நிமிடங்களில் தான் செய்த தவறை செந்தில் பாலாஜி ஒப்புக் கொண்டிருந்தால் ஏன் 18 மணி நேரம் விசாரணை நடக்கப் போகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி தான் தற்போதைய சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இது கூட தெரியாத அளவிற்கு தமிழக முதல்வர் உள்ளார்” என்றும் பேட்டி அளித்தார்.

கடந்த காலங்களில் ஸ்டாலின் சொன்னதைப் போன்று ஒரு மோசடி பேர்வழிக்கு ஒரு ஊழல் பேர்வழிக்கு தற்பொழுது காவடி தூக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் எச்சரிக்கை விடுப்பதாகவும், சாதாரண மனிதர்களிடம் மூன்று லட்சம் ஐந்து லட்சம் என லஞ்சம் வாங்கிய ஒரு நபருக்கு திமுகவினர் ஏன் பல்லக்கு தூக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் தனது அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றலாம் அதில் அவருக்கு உரிமை உள்ளது, ஆனால் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என சொல்லாதது ஏன், அதைத்தான் ஆளுநர் ஆர்.என் கேள்வி கேட்கின்றார். முதலமைச்சர் அரசியல் அமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டும்.திமுகவின் மிரட்டலுக்கு பாஜக அடிபணியாது.

திமுக ஆட்சியில் அரசியலமைப்பு எந்திரம் மிக மோசமாக செயல்படுகிறது என்றும் ஏனென்றால் சிறைவாசம் என்றால் வனவாசம் என்பதை போல் திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக நாராயண திருப்பதி குற்றம் சாட்டினார். கடந்த காலங்களில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக குரல் எழுப்பிய ஸ்டாலினைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம் தற்போது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா என்று என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பினார்.

ஆட்சியாளர்களின் மீது கேள்வி எழுப்பினால் காவல்துறையினரை வைத்து மிரட்டுவது தமிழகத்தில் தான் நடைபெற்று வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியில் எதிலும் ஊழல் உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வருவதாகவும்,செந்தில் பாலாஜி இருந்த அனைத்து இடங்களில் ஊழல் மிகுந்துள்ளது என்றும் முதலமைச்சர் யூடியூபர் போல் மிரட்டுவது கண்டிக்க தக்கது என கூரினார்.

தமிழகத்தில் நுழைய முடியாத கட்சியாக பாஐக இல்லை.2026ல் பாஐக தனித்தோ அல்லது கூட்டணி ஆட்சியாக தமிழகத்தில் அமையும்.அதிமுக ஆட்சியில் தவறு செய்த செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் குடை பிடிக்கிறார். சில நேரங்களில் சில வார்த்தைகள் தவறுதலாக மாறிவிடுகின்றன அதேபோலத்தான் தற்போது அதிமுகவும் மற்றும் பாஜகவுக்கு இடையே நடைபெறுகின்ற வார்த்தை மோதல் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டியளித்தார்.

இதையும் படிங்க:”நீ எல்லா இடத்திலேயும் பிரச்னை பண்ற, உன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பேன்” - விவசாயியை மிரட்டிய கரூர் கலெக்டர்!

ABOUT THE AUTHOR

...view details