தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மோதல் - போலீஸ் விசாரணை - கல்லூரி மாணவர்கள் மோதல்

பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வெளியாட்கள் 10 பேர் சேர்ந்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat கல்லூரி மாணவர்கள் மோதல்
Etv Bharat கல்லூரி மாணவர்கள் மோதல்

By

Published : Sep 16, 2022, 4:58 PM IST

Updated : Sep 16, 2022, 5:27 PM IST

திருவண்ணாமலை:ஆரணியில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் செய்யாறு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் பேருந்தில் பயணம் செய்து படித்து வருகின்றனர்.

அதன்படி இன்று செய்யாறில் கல்லூரி முடித்து ஆரணிக்கு பேருந்தில் பயணம் செய்யும்போது கல்லூரி மாணவர்களிடையே பேருந்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில் சதீஷ் என்ற மாணவன் தன்னை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக, தனது சகோதரருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சதீஷின் அண்ணன் உடனடியாக 10 பேரை அழைத்துக்கொண்டு ஆரணி மாங்காமரம் பேருந்து நிறுத்தம் அருகே செய்யாறிலிருந்து வரும் கல்லூரி மாணவர்கள் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை சதீஷின் சகோதரன் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறைத்து சதீஷை தாக்கிய கல்லூரி மாணவர்களைத் தாக்கினர். பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் இதைத் தடுத்துள்ளனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பலுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிதடி நடந்தது.

பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மோதல் - போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாமுதீன் மற்றும் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களே மடக்கிப்பிடித்து சண்டையை தடுத்து நிறுத்தினர்.

காவல் துறையினரைக் கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து, மோதலுக்குக் காரணமான கல்லூரி மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை...இருவர் கைது

Last Updated : Sep 16, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details