தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதுகாப்பு கவசங்களின்றி வங்கியில் குவிந்த பொதுமக்கள்: கண்டுகொள்ளாத ஊழியர்கள் - பாதுகாப்பு கவசங்கள் என்று வங்கிக்கு வந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை: கரோனா தொற்று குறித்து கவலைப்படாமல் உரிய பாதுகாப்பு கவசங்கள் இன்றி வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்ய வந்த பொதுமக்களை கண்டு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள்

By

Published : Jun 9, 2020, 4:24 AM IST

திருவண்ணாமலை நகரின் சின்னக்கடை வீதியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பொது மக்கள் வங்கி கணக்கு வைத்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நோய்த்தொற்று அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 8) திங்கள்கிழமை என்பதால் வங்கி திறந்ததும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் ஒன்றாக வந்து பணபரிவர்த்தனை செய்ய வந்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பண பரிவர்த்தனை செய்ய வந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியை பற்றி சிறிது கூட கவலைப்படாமலும் இருந்தனர்.

வங்கியில் பணியாற்றும் வங்கி அலுவலர்களும், பணியாளர்களும் முகக்கவசம் ஏதும் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை முறைப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பணியாற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details