தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் இன்று (ஏப்ரல்.16) பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.

சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்
சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

By

Published : Apr 16, 2021, 10:35 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை உற்சவம் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது.

அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி தினமும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு 10 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details