தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பலகாரங்களை சாப்பிட்டதில் அக்கா - தம்பி உயிரிழப்பு - Thiruvannamalai District Sengam

திருவண்ணாமலை: செங்கம் அருகே பொங்கலுக்கு செய்த இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு அக்கா-தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் பொங்கல் பலகாரங்களை சாப்பிட்டதில் அக்கா-தம்பி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் பொங்கல் பலகாரங்களை சாப்பிட்டதில் அக்கா-தம்பி உயிரிழப்பு

By

Published : Jan 18, 2021, 3:06 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாலி பழனி(35) இவரது குழந்தைகளான யாசினி (6), ஹரி(4) ஆகிய இருவரும் பொங்கலுக்கு செய்த பலகாரங்களை சாப்பிட்டதும் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்ட அவரது பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகளை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்தபோது குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து பாச்சல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளின் உயிழப்புக்கு காரணம் என்னவென தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இனிப்பு பலகாரம் சாப்பிட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details