முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், போளூர் ஆகிய வட்டங்களில் மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் 10,600 பயனாளிகளுக்கு ரூ24.87கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் குறிப்பாக, வருவாய்த்துறை, ஊரகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், மாதாந்திர உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, பசுமை வீடுகள் திட்டம், வேளாண் உபகரணங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.