உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அண்டப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வெங்கடேசன் செங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
நேற்று சமூக வலைதளங்களில் அண்டப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு கரோனா வைரஸ் உள்ளதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்ததை போல் தயார் செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.