திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையால் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள துவாரபாலகர் சிலையின் முகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.
கோபுரத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் துவாரபாலகர் சிலையின் முகத்தில் தொலையிட்டு கண்காணிப்பு கேமராவை பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியதால் கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஊழியர்கள் உடனடியாக துவாரபாலகர் முகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி சிலையின் அருகில் மாற்றி பொருத்தியுள்ளனர்.
துவாரபாலகர் சிலையின் முகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா - வைரலாகும் போட்டோ பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்று தவறுகள் செய்தால் கோவில் பாரம்பரியம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன் சிலைகளின் அமைப்பும் பாழாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுப்ரியா சாகு பாராட்டு