தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலணி கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் பணம் கொள்ளை - ஏழாயிரம் ரூபாய் மற்றும் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க் கொள்ளை

திருவண்ணாமலை: காலணி கடையின் பூட்டை உடைத்து ஏழாயிரம் ரூபாய், சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

cash and harddisk robbery in footwear shop at tiruvannamalai
cash and harddisk robbery in footwear shop at tiruvannamalai

By

Published : Jul 30, 2020, 3:52 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், சவுக்கத் அலி. இவர் அதே பகுதியில் காலணி கடை நடத்திவருகிறார். இவர் நேற்று மாலை 5 மணியளவில் வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இன்று காலை மீண்டும் கடையைத் திறப்பதற்காகச் சென்றபோது, கடையின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ஏழாயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், கடையின் சிசிடிவி கேமராவின் காட்சிகளைப் பதிவு செய்துவந்த ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details