திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராஜேஸ்வரி. இவருடைய கணவர் நாராயணசாமி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு கோமதி என்ற பெண் உள்ளார். அவர் ஓண்ணுபுரம் என்ற பகுதியில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
ராஜேஸ்வரி தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு அவர் அப்பகுதி மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஆக.21) காலையில் ராஜேஸ்வரியின் வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது. இதில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகள் கோமதிக்கு தகவலளித்துள்ளனர்.