திருவண்ணாமலை:ஆரணி அருகே கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் வருட வருடம் மார்கழி அமாவாசை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காளை விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.
ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள 125 கிராமங்களுக்கு காளை விடும் விழா நடத்த அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், வேலூரில் அனுமதியளித்தது போல் திருவண்ணாமலை மாவட்டத்திலும் காளை விடும் விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கொளத்தூர் கிராமத்தில் 55ஆம் ஆண்டு காளை விடும் விழா நேற்று(ஜன.2) காலை தடையை மீறி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.