தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதவை உதவித்தொகை வழங்க லஞ்சம் - வருவாய் ஆய்வாளர் கைது!

திருவண்ணாமலை அருகே விதவை உதவித்தொகை வழங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதவித்தொகை வழங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் அதிரடியாக கைது!
உதவித்தொகை வழங்குவது தொடர்பாக லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் அதிரடியாக கைது!

By

Published : Jul 21, 2022, 5:04 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர், புதுரான் மனைவி சுலோக்சனா. இவரது இரண்டு மகன்களும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். மேலும் சுலோக்சனாவின் கணவர் புதுரான், கடந்த 2014 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். இதனால் அவர் கூலி வேலை செய்தும், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்தும் வருகிறார்.

இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விதவை உதவித்தொகையும் பெற்று வந்துள்ளார். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக விதவை உதவித்தொகை வராமல் இருந்ததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் ஷாஜியா பேகம், சுலோக்சனாவிடம் விசாரணை செய்துவிட்டு 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், விதவை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முதல் தவணையாக 5,000 ரூபாயும், உதவித்தொகை கிடைத்தவுடன் மீதமுள்ள 10,000 ரூபாயையும் தருவதாக சுலோக்சனா கூறியுள்ளார். அதேநேரம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் சுலோக்சனா புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர், ரசாயண பொடி தடவிய 5,000 ரூபாயை மல்லவாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஷாஜியா பேகத்திடம் கொடுக்கச் செய்தனர்.

பின்னர் ஷாஜியா பேகம் பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய போளூர் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கைது!

ABOUT THE AUTHOR

...view details