திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி சுந்தரவள்ளி. இருவரும் விவசாய பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் முனுசாமி தனது குடும்பத்தினருடன் நேற்று (மார்ச் 1) பணிக்காக விவசாய நிலத்திற்கு சென்றனர். பணி முடிந்து வீடு திரும்பிய முனுசாமியும் அவரது மனைவியும் வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை - விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருவண்ணாமலை: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
theft
பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 3 சவரன் நகை, ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முனுசாமி கீழ்பெண்ணாத்தூர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.