தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் சிறப்பு அலங்காரம் - வளையல் அலங்காரத்தில் அம்மன்

திருவண்ணாமலை: ஆடிப்பூரம் - ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ காளி அம்மனுக்கு வளையல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

வளையல் அலங்காரத்தில் அம்மன்
வளையல் அலங்காரத்தில் அம்மன்

By

Published : Jul 24, 2020, 8:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயசக்தி காளியம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு 10 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை - ஆடிப்பூர தினத்தில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர். ஸ்ரீ ஜெய் சக்தி காளியம்மன் ஆலயத்தில் உள்ள காளி அம்மனுக்கு காலை முதல் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் அம்மன் பக்தர்களுக்கு லிங்க பைரவி அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனை பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்துகொண்டும் கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details