தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தலையை வெட்டி காணிக்கையாக்குவேன்' - குடிபோதையில் டிக்டாக் செய்த இளைஞர் கைது - காடுவெட்டி குரு இளைஞர் டிக் டாக் கைது

திருவண்ணாமலை : காடுவெட்டி குருவின் 2ஆவது நினைவு நாளையொட்டி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் டிக்டாக் வீடியோ பதிவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kaduvetti Guru
Kaduvetti Guru

By

Published : May 27, 2020, 10:04 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கரிக்கந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், காடுவெட்டி குருவின் நினைவு நாளையொட்டி, குறிப்பிட்ட சமுதாயத்துக்கு யார் எதிரியாக இருந்தாலும் அவர்களின் தலையை வெட்டி காடுவெட்டி குருவின் பாதங்களுக்குக் காணிக்கையாகச் செலுத்துவேன் என்று பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதையறிந்த ஆரணி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Kaduvetti Guru


இதுகுறித்த விசாரணையில் பேசிய பச்சையப்பன், "நான் குடிபோதையிலிருந்ததால் அவ்வாறு ஆவேசமாகப் பேசிவிட்டேன். என்னுடைய தவறை உணர்ந்து நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

பச்சையப்பன் பதிவிட்ட டிக்டாக் காணொளி வரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!

ABOUT THE AUTHOR

...view details