திருவண்ணாமலை ; செங்கம் பழைய பேருந்து நிலையம் எதிரே நந்தினி பிரியா என்ற பெயரில் இயங்கி வரும் இரத்த பரிசோதனை நிலையத்தில் அனைத்து வகையான நோயாளிகளுக்கும் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ அலுவலருக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில், ரத்த பரிசோதனை நிலையத்தை மருத்துவதுறை அலுவலர் அருளானந்தம் தலைமையிலான அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், பரிசோதனை நிலையத்தை நடத்திவந்த ரேணுகா என்பவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து ரத்த பரிசோதனை மையத்திற்கு அவர்கள் சீல் வைத்தனர்.