திருவண்ணாமலை நகர், ரமணாஸ்ரமம் அருகே உள்ள 26ஆவது வார்டு பாஜக சார்பில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, கரோனா நிவாரண உதவிப் பொருள்கள், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவண்ணாமலை: பாஜக சார்பில் ஐந்து கிலோ அரிசி, மளிகை பொருள்கள், முகக்கவசம் உள்ளிட்ட கரோனா நிவாரண உதவியுடன் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு ஐந்து கிலோ அரிசி, மளிகை பொருள்கள், சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை, சோப்பு, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கப்பட்டது.
முன்னதாக பொதுமக்களின் வீட்டுக்குச் சென்று டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில், தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து நிவாரண பொருள்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவமும் வழங்கப்பட்டது.