தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
திருவண்ணாமலை தொகுதி
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைமை அலுவலகத்தில், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 19) பாஜக வேட்பாளர் தணிகைவேல், தனது வேட்புமனுவினை திருவண்ணாமலை தொகுதி தேர்தல் அலுவலர் வெற்றிவேலிடம் தாக்கல்செய்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தணிகைவேல், "திருவண்ணாமலை தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவதே என்னுடைய முதல் பணி. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எ.வ. வேலு கடந்த 15 ஆண்டு காலமாக திருவண்ணாமலை தொகுதியில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.