தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் - ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு! - திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

திருவண்ணாமலை: ஊராட்சி ஒன்றியம் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 218 பேர் வாக்கு எண்ணும் பணிக்கு வராததால் வாக்கு எண்ணும் பணி தாமதானது.

collector kandasamy
collector kandasamy

By

Published : Jan 2, 2020, 4:47 PM IST

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று பதிவான வாக்குகள் அனைத்தும் திருவண்ணாமலை டேனிஷ் மிஷின் பள்ளியில் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் பணிகள் தாமதமானதால், வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கந்தசாமி

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மையத்துக்கு கொண்டு வந்து வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டுவருகிறது. இதில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

சீல் திறக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி குறித்த கேள்விக்கு, பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மாதிரி வாக்குப் பெட்டி என்று பதிலளித்தார். மேலும், ஆசிரியர்கள் வாக்கு எண்ணும் பணியை புறக்கணித்ததாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது உணவு வந்துவிட்டது. உணவு சாப்பிட்டு அவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று வாக்குகள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுக அரசு சதி!

ABOUT THE AUTHOR

...view details