திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஒரு சொல் மந்திரம் என்ற அடிப்படையில் ஒரே குரலாக வணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் ஒரு கோடி பேர். பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். அந்த கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு தரப்புகளுக்கு அரசு பல சலுகைகளை அள்ளி கொடுத்து வருகிறது. ஆனால் வியாபாரிகளுக்கு கில்லி கொடுப்பதற்கு கூட அரசு மனமில்லாமல் இருக்கிறது.