திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து படித்து செல்கின்றனர்.
அடிப்படை வசதி இல்லாததால் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - அடிப்படை வசதிக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை: அடிப்படை வசதிக்கோரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![அடிப்படை வசதி இல்லாததால் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4362219-thumbnail-3x2-jjjjjj.jpg)
அடிப்படை வசதி இல்லதாதல் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் நேற்று கல்லூரியில் குடிநீர், கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்தும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்தும் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாக நுழைவுவாயிலின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.