திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீயால் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நூறாண்டு பழமையான மரத்திற்கு தீ - நூறாண்டு பழமையான மரம்
திருவண்ணாமலை: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.
![நூறாண்டு பழமையான மரத்திற்கு தீ afad](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6876640-1080-6876640-1587444230759.jpg)
fasdfa
ஆலமரத்திற்கு தீ
சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆடு மாடுகளை மேய்க்க வரும் கிராம மக்கள் கோடை வெயிலின்போது மதிய வேளைகளில் இளைப்பாறுவதற்கு இந்த ஆல மரம் குடை போல் காட்சியளிக்கும்.
தற்போது இந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரத்திற்கு தீயை வைத்து மரத்தை சேதப்படுத்தியதன் விளைவாக மரம் பெருத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆலமரத்தில் தீ மளமளவென்று எரிந்ததை பார்த்த ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.