தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை...வெறிச்சோடிய கிரிவலப்பாதை

கரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் தடைசெய்யப்பட்டுள்ளதால் கிரிவலப் பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

கிரிவலம் செல்ல தடை
கிரிவலம் செல்ல தடை

By

Published : Apr 26, 2021, 10:07 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வழிபாட்டுத்தலங்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அனுமதி இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. சித்ரா பௌர்ணமி நாளன்று பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்து கிரிவலம் வருவார்கள். ஆனால் கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ளதால், கிரிவலப் பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

கிரிவலம் செல்ல தடை

மேலும் கிரிவலப்பாதையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details