தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு: தடைமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமமுகவினர் கைது! - babur mosque protest in thiruvannamalai

திருவண்ணாமலை: பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமுமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

babur mosque protest
babur mosque protest

By

Published : Dec 8, 2019, 11:12 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் ஜலால் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், காவல் துறையினர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று காலை திடீரென ஆரணி டவுன் பாரதியார் தெருவிலிருந்து காந்தி ரோடு மார்க்கெட் வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஆரணி மணிகூண்டு அருகில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பிற்காகக் குவிக்கபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமமுகவினர்

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட மறுத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமமுகவினரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

‘திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது தவறல்ல’ - உயர் நீதிமன்றம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details