தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் அழகுமுத்துகோன் 265ஆவது குருபூஜை விழா! - அழகுமுத்துகோன் 265ஆவது குருபூஜை விழா

அழகுமுத்துகோன் 265ஆவது குருபூஜை விழாவையொட்டி திருவண்ணாமலையில் 500 பேர் ஊர்வலமாக சென்று அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Jul 11, 2022, 8:15 PM IST

திருவண்ணாமலை:சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் 265ஆவது குருபூஜை விழா இன்று(ஜூலை 11) கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 16 கால் மண்டபத்திலிருந்து 500 பேர் ஊர்வலமாக சென்று காஞ்சி ரோட்டில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதிமுக மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன், தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்துக்கு சட்டமன்ற துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலையில் அழகுமுத்துகோன் 265ஆவது குருபூஜை விழா

இதையும் படிங்க: அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details