தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் வேன்

திருவண்ணாமலை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் கவிழ்ந்து விபத்தானதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

By

Published : Dec 19, 2022, 9:50 AM IST

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு கிராமத்திற்கு வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பூஜைக்கு இன்று (டிச.19) சென்றனர். எட்டிவாடி கூட்ரோடு அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி பஸ் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் நிலைகுலைந்த மினி பஸ் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த வேலூர் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பொதுமக்கள், அவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிருபர்: உடல் உறுப்புகள் தானம்

ABOUT THE AUTHOR

...view details