திருவண்ணாமலை:ஆரணி டவுன் பகுதியில் உள்ள 33 வார்டுகளில் பல இடங்களில் குப்பை மேடாக காட்சியளிக்கின்றதாகவும் இதனால் ஆரணி நகர் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாக உள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆரணி நகராட்சி அதிகாரிகள் சார்பில் “என் குப்பை என் பொறுப்பு” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 5ஆவது வார்டில் நடைபெற்றது. இதில் பாரிபாபு, ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.